16334 ஆரோக்கிய ஆரம் : சித்த ஆயுள்வேத கட்டுரைகள்.

துரைராசா இராஜவேல் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: டாக்டர் த.துரைராசா நினைவு வெளியீடு, பாமாலயம், கவிஞர் செல்லையா வீதி, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).

x, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

அமரர் டாக்டர் தம்பு துரைராசா அவர்களின் நினைவு வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் சித்த ஆயுர்வேத கட்டுரைகளை கொண்டுள்ளது. சுதேச மருத்துவத்தில் வாத பித்த கபம்-ஓர் அறிமுகம் (டாக்டர் பொன் இராமநாதன்), சித்த மருத்துவம் (டாக்டர் சே.சிவசண்முகராஜா), இதய நோய்க்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும் (டாக்டர் அன்புச்செல்வி சிறீதரன்), மூலிகைகளிலிருந்து மருந்து உற்பத்தி (டாக்டர் ரோகினி பூபாலசிங்கம்), உணவும் ஆரோக்கியமும் (செல்வி மதுராங்கி சுந்தரேஸ்வரன்), சித்த மருத்துவமும் உளநலனில் அதன் பங்கும் (டாக்டர் N.J.Q. தர்ஷனோதயன்), பஞ்சகர்ம சிகிச்சை ஓர் அறிமுகம் (டாக்டர் கலைச்செல்வி சௌந்தரராஜன்) ஆகிய கட்டுரைகள் இந்நினைவிதழில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்