சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை. யாழ்ப்பாணம்: சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: வடமாகாண சுகாதார அமைச்சு, 1வது பதிப்பு, மாசி 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
65 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
வடமாகாண அரசு, யாழ். பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2016இல் நடத்திய மாகாண ஆரோக்கிய விழாவின்போது வெளியிடப்பட்ட சமூக மருத்துவ அறிவுநூல். தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாப்போம், வீட்டுத் தோட்டம் செய்திடுவோம், விவசாயத்தில் அசேதன இரசாயனத்தின் பாவனையும் மனித வாழ்வில் அதன் தாக்கமும், வீட்டுக் கழிவுகளைப் பயன்படுத்தி சேதனப் பசளை தயாரித்தல், ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை பீடைநாசினிகளைப் பாவிப்போம், வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் தாவரங்களின் நன்மையும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதில் அவற்றின் பங்களிப்பும், பாரம்பரிய பயிர்களும் மருத்துவக் குணங்களும், வீட்டில் கீரைகளைப் பயிரிடுவோம்-குருதிச்சோகை ஏற்படாது தவிர்ப்போம், மாறுபட்ட காலநிலைகளுக்கேற்ப பயிர்செய்வோம், ஒட்டுதலும் அரும்பொட்டுதலும், ஒயிஸ்டர் காளான் வளர்ப்பு, சேதன பசளை தயாரித்தல் ஆகிய தலைப்புகளில் பல்வேறு சுருக்கக் குறிப்புகள் விளக்கப்படங்களுடன் தரப்பட்டுள்ளன.