16343 பயன் அறிந்து உண்க.

பால. சிவகடாட்சம். திருக்கோணமலை: வானவில் வெளியீடு, 1வது பதிப்பு, 2016. (திருக்கோணமலை: ரெயின்போ கிராப்பிக்ஸ்).

114 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

இந்நூலில் எமது பாரம்பரிய உணவுப் பயிர்களின் பயன்பாடு, அவற்றில் பொதிந்துள்ள சத்துக்கள் என்பன பற்றி எடுத்துரைக்கப்படுகின்றது. குரக்கன், தினை, வரகு, கம்பு, சாமை, முளைக்கீரை, செடிப்பசளி, கொடிப்பசளி, பருப்புக் கீரை, பொன்னாங்காணி, வல்லாரை, முடக்கொத்தான், தூதுவளை, அகத்தி, கறி வேப்பிலை, முசுமுசுக்கை, குறிஞ்சா, முருங்கை, வாழை, கத்தரிக்காய், வெண்டிக்காய், சுரைக்காய், பாகற்காய், பீர்;கங்காய், புடொலங்காய்,  நீற்றுப்பூசணி, பூசணிக்காய், வெள்ளரிக்காய், கெக்கரிக்காய், தார்ப்பூசணி, கியுகம்பர், கொவ்வைக்காய், மிளகாய், இஞ்சி, சுக்கு, மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம், உள்ளி, கொத்தமல்லி, பெருங்காயம், சாதிக்காய், இலவங்கப்பட்டை, சதகுப்பை, குங்குமப்பூ, பலாப்பழம், விளாம்பழம், மாம்பழம், மாதுளம்பழம் ஆகிய உணவுப் பொருள்களின் பதார்த்தகுணம் பற்றி இந்நூல் விரிவாக விளக்குகின்றது. இந்நூல் அமரர் இராசையா பழனியப்பா அவர்களின் நினைவாக 19.04.2023அன்று மீள்விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கலாநிதி பால. சிவகடாட்சம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் உயிரியற்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

15982 இலங்கை கிழக்கு மாகாணம்: மட்டக்களப்பு மாவட்டக் கையேடு.

எஸ்.ஓ.கனகரத்தினம்.(ஆங்கில மூலம்), சா.திருவேணிசங்கமம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xviii,