16345 நிறுவனங்களில் தலைமைத்துவம்.

தனேஸ்வரி ரவீந்திரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

x, 131 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-00-3.

முகாமைத்துவத்தில் பல மூலங்கள் காணப்பட்டாலும், தலைமைத்துவம் என்ற அம்சம் இன்று அதிமுக்கியம் பெறும் ஒன்றாக உள்ளது. எந்தவொரு நிறுவனத்தினதும் வெற்றிக்கு சிறந்த தலைமைத்துவம் அவசியமாகும். தலைமைத்துவத்தின் வெற்றி என்பது நிறுவனத்தின் வெற்றியினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதே வேளை நிறுவனத்தின் வெற்றிக்கான அத்திவாரமானது தலைமைத்துவத்தினால் இடப்படுகின்றது. இந்த வகையில் நிறுவனங்களைத் திறம்பட இயக்குவதற்கு ஏற்ற பொருத்தமான தலைமைத்துவப் பாங்குகளை அறிந்து கொள்ளவும், எதிர்கால முகாமையாளர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிநெறிகளை வடிவமைத்துக் கொள்ளவும் இந்நூல் வழிகாட்டுகின்றது. தலைமைத்துவம் பற்றிய அறிமுகம், தலைமைத்துவ கோட்பாடுகள், பங்குபற்றும் தலைமைத்துவம், கையளிப்பு மற்றும் அதிகாரமளித்தல், தலைமைத்துவ வெற்றிக்கு அவசியமான ஆளுமை மற்றும் திறன்கள், தலைமைத்துவ ஆற்றல்களை அபிவிருத்தி செய்தல், நிறைவேற்று உத்தியோகத்தர்களது தந்திரோபாய தலைமைத்துவம் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி தனேஸ்வரி ரவீந்திரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொழில்நிர்வாகமாணிப் பட்டத்தைப் பெற்று பின்பு முகாமைத்துவத்துறையிலேயே விரிவுரையாளராக இணைந்து கொண்டார். 25 வருடங்களுக்கு மேலாக மனிதவள முகாமைத்துவத்தினைக் கற்பித்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்

fifty Free Spins No deposit Required

Content Refer-a-Friend Added bonus – Jammin Jars video slot 🧮 Ideas on how to estimate the new 100 percent free Revolves Betting Criteria Create I