16347 கலை வரலாறு: முதலாவது இதழ்(தை-ஆனி 2020).

யோகலிங்கம் நிசாந்தன், ஸ்ரீபன் கிருபாலினி, தாமோதரம்பிள்ளை சனாதனன் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கலை வட்டம், நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(8), 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு 25×17.5 சமீ., ISSN: 2792-1433.

காண்பியக் கலை, காண்பியப் பண்பாடு, மரபுரிமை என்பவற்றுக்கான ஆய்வேடு. இவ்விதழில் யாழ்ப்பாணத்து மணவறை அலங்காரங்களின் போக்கு மாற்றம் (திவானி கந்தசாமி), யாழ்ப்பாணத்தில் மரியாள் வழிபாடும் வடிவங்களும் (ஆதித்தன் ஜேஸ்மின் கார்மேலா, ஸ்ரீபன் கிருபாலினி), புத்தளத்தின் மரபுரிமை (கே.ஆர்.எப்.ஹிப்ரத்), மீயதார்த்தவாத முன்னோடிகள் (புவனேஸ்வரன் பிரசாந்), எச்.ஏ.கருணாரத்ன (இலங்கையின் நவீன அரூப ஓவிய முன்னோடியுடனான நேர்காணல்-ஹனுசா சோமசுந்தரம்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இப்படைப்பாக்கங்கள் அனைத்தும் காண்பியக் கலை, காண்பியப் பண்பாடு, மரபுரிமை சார்ந்து புதிய வாசிப்புகளுக்கான தொடக்கப்புள்ளியாக அமைகின்றன.

ஏனைய பதிவுகள்