16359 ஏழிசை கீதமே: தமிழ்த் திரையிசைப் பாடல்கள் குறித்த பதிவுகள்.

சி.விமலன். யாழ்ப்பாணம்: சின்னராஜா விமலன், உயில் வெளியீடு, திரவிய பவனம், மனோகரா, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா அச்சகம், பிரதான வீதி, நெல்லியடி).

128 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-44157-2-0.

இது தமிழ்த்திரை இசைப்பாடல்கள் குறித்த பதிவுகளைக் கொண்ட கட்டுரை நூல். நூலாசிரியர் விமலன் வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கிளை நதியின் பிரவாகம் (2013), விசையுறு பந்தினைப் போல் (2014) ஆகியவற்றைத் தொடர்ந்து இவரது மூன்றாவது படைப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஈழத்துக் கலை இலக்கிய வெளியீடுகளில் இசை பற்றிய நுண்பார்வையுடன் நூல்கள் வெளிவருவது அரிது. அதிலும் சினிமாப் பாடல்களை, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இரசித்தாலும், அவை தீண்டத் தகாதவை, அவை இசை வகையே அல்ல என்று முழங்கும் சில படைப்பாளிகள் மத்தியில் சினிமாப் பாடல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஈழத்தில் தமிழ்த் திரை இசைப்பாடல்கள் குறித்த ஆய்வுகளுக்கான ஒரு முன்வரைவு எனலாம்.

ஏனைய பதிவுகள்

Come comprare Revatio

Dove Posso Ordinare Sildenafil Farmacia Italiana online? Come acquistare Revatio 20 mg senza medico? La prescrizione è quando si acquista Revatio 20 mg online in