12632 – மூலிகை மகத்துவம்.

இராமநாதன் கலைவாணன். மட்டக்களப்பு:அன்பு வெளியீடு, 18, நல்லையா வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2005. (மட்டக்களப்பு: எவர்கிரீன், திருமலை வீதி).

xi, 73 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×15 சமீ.

இந்நூலில் துளசி, பட்டிப்பூ, கையான்தகரை, குப்பைமேனி, வல்லாரை, பொன்னாங்காணி, அமுக்குறா, வெள்ளைப்பூடு, நெல்லி, ஆடுதீண்டாப் பாலை, ஆடாதோடை, கீழ்க்காய் நெல்லி, அரிவாள் மனை, கண்டங்கத்தரி, மருதாணி, சிறுகுறிஞ்சா, எருக்கு, இம்பூறல், முருங்கை, நெருஞ்சி, அறுகு, நீர்முள்ளி, திருநீற்றுப்பச்சை, அம்மன் பச்சரிசி, புண்கை, வேம்பு, வசம்பு, செம்பரத்தை, இலுப்பை, கோரைக் கிழங்கு, அரசு, நஞ்சறப்பாஞ்சான், இலந்தை, வெங்காயம், தவசிமுருங்கை, பப்பாசி, மாதுளை, ஆலமரம், அகத்தி, வில்வம், வெற்றிலை, தூதுவளை, புதினா, தர்ப்பை, கழற்சி, யானைவணங்கி, கருவேலம், வேலிப்பருத்தி ஆகிய 48 மூலிகைகளின் குணாம்சம், மருத்துவப் பயன்பாடு ஆகியவற்றை இந் நூல் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37186).

ஏனைய பதிவுகள்

12521 – வணிகக் கல்வியும் கணக்கீடும்: தரம் 11.

இ.இரத்தினம். யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் பதிப்பகம், 3வது பதிப்பு, 2003, 1வது பதிப்பு, 2001, 2வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் பதிப்பகம்). (4), 124 பக்கம், விலை: ரூபா 150., அளவு: