12635 – தமிழர் சுகாதாரம்:சித்த வைத்திய சுகாதாரம்.

தண்டிகைக் குலசேகரம்பிள்ளை (இயற்பெயர்: க. பாலசுப்பிரமணியம்). யாழ்ப்பாணம்: இலங்கா தமிழ் வைத்திய ஆராய்ச்சி மன்றம், 1வது பதிப்பு, ஜுன் 1986. (காரைநகர்: பாலா அச்சகம்).

(4), 49 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 20.5×14 சமீ.

இலங்கா தமிழ் வைத்திய ஆராய்ச்சி மன்றத்தின் பிரதம ஆராய்ச்சியாளரும், தலைவருமான வைத்தியர் க.பாலசுப்பிரமணியம் அவர்களின் சித்த வைத்திய நூல் இது. சுத்தம், நாட்கடமை, பருவ காலங்களும் வாழ்க்கை முறைகளும், உணவு, உணவும் சுவையும், உணவும் நஞ்சும், நமது உணவிலுள்ள சத்துக்கள், வேகங்களை அடக்கலாகாது, பிணி, மருத்துவம், நோய் தடுப்பும் நீடித்த வாழ்நாளும் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9447. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 007183).

ஏனைய பதிவுகள்