12640 – இலை மரக்கறிகள்.

விவசாயத் திணைக்களம். பேராதனை: விவசாயத் திணைக்களம், விவசாய காணி அமைச்சு, த.பெ.எண் 18, 1வது பதிப்பு, 1999.(பேராதனை: விவசாயத் திணைக்கள அச்சகம், கண்ணொறுவை).

26 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ.

தாவரங்களின் இலைகள், இளம் தண்டுகள் என்பதாகவே இலை மரக்கறிகளாக இந்நூலில் குறிப்பிடப்படுகின்றது. இலங்கையில் இலை மரக்கறியாக பலவகையான தாவரங்கள் உண்ணப்படுகின்றன. இவற்றை இனம்கண்டு அவற்றின் பொருளாதாரஃ வர்த்தக நோக்கிலான உற்பத்திப் பெருக்கத்திற்கான ஆலோசனைகளை விவசாயி களுக்கு வழங்கும் நோக்கில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் இலைமரக்கறிகளாக இனம்காணப்பட்டுள்ள பொன்னாங்காணி, வல்லாரை, சாறணை, கொஹில, கங்குன், பசளி, அகத்தி ஆகிய தாவரங்களின் இயல்புகள், அவற்றைப் பயிரிடும் வழிவகைகள் என்பனவற்றைத் தனித்தனி இயல்களாக இந்நூல் விளக்குகின்றது. மேலும் இவற்றின் ஆயர்வேத இயல்புகள் பற்றியும் இறுதியாக ஒரு இயலில் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32716).

ஏனைய பதிவுகள்