தி.வேல்நம்பி. யாழ்ப்பாணம்: குரு வெளியீடு, 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
viii, 136 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-51423-1-1.
பல்வேறு முகாமைத்துவ எண்ணக்கருக்களை ஒரே சமயத்தில் உள்வாங்கிய முறையில் இந்நூல் அமைகின்றது. இந்நூல் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் முகாமைத்துவ அறிவினை வளர்த்தெடுக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. செயல்திறன் அளவீட்டுக் காரணிகள்: ஓர் எண்ணக்கரு ரீதியான ஆய்வு, ஆசிரியர் தொழில்சார் வாண்மை விருத்தியும் வழிகாட்டலும்: ஓர் செயற்பாட்டுத் திட்டம், பாடசாலைத் தலைமைத்துவம், நேரமுகாமைத்துவம், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிறுகைத் தொழில் முயற்சிகள்-ஓரு ஆய்வு ஆகிய ஐந்து பிரதான இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆசிரிய வாண்மை விருத்திக்கான வழிவகைகளும், பாடசாலைத் தலைமைத்துவத்திற்கான வழிகாட்டல்களும் இயலுமானவரை இந்நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லோருக்கும் அவசியமான நேர முகாமைத்துவம் சற்று விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் சிறு தொழில் முயற்சிகள் பற்றிய தடைகள், அத்தடைகளை நீக்குவதற்கான வழிகள் பற்றியும் இந்நூலிலவிரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51031).