12650 – தமிழ்த் தட்டெழுத்து: தொடுகைமுறைப் பயிற்சி வழிநூல்.

சே.சிவசுப்பிரமணிய சர்மா. சுன்னாகம்: சே.சிவசுப்பிரமணிய சர்மா, கந்தரோடை, 1வது பதிப்பு, மே 1964. (கல்லச்சுப் பிரதியாக வெளிவந்த நூல்).

(28), 11+19 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 16×20 சமீ.

கல்லச்சுப் பிரதியாக ஆசிரியரால் வெளியிடப்பட்ட இப்பயிற்சி நூல் சித்திரக் கொப்பி வடிவில் அச்சிடப்பட்டுள்ளது. கணனிப் பயன்பாட்டுக்கு முன்னர் ஒரு காலகட்டத்தில் பிரபல்யமாக இருந்த றிமிங்ரன், ஒலிம்பியா வகைத் தமிழ்த் தட்டச்சு இயந்திரங்களின் எழுத்தமைப்புக்கு இணங்கத் தயாரிக்கப்பட்ட தட்டச்சுப் பயிற்சிக் கைநூல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2886).

ஏனைய பதிவுகள்

10146 புட்டபர்த்தியில் நான்.

தேவன்-யாழ்ப்பாணம் (இயற்பெயர்: இ.மகாதேவன்). யாழ்ப்பாணம்: இ.மகாதேவன், 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறைச் சாலை). 64 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ. ஈழத்தின் பிரபல எழுத்தாளரும்,

17628 அமெரிக்க விருந்தாளி-சிறுகதைகள்.

தியா (இயற்பெயர்: காண்டீபன்; இராசையா) சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 9, பிளாட் எண்: 1080A, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024.