வி.மைக்கல் கொலின். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மே 2022. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
xxviii, 108 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-5849-04-8.
மைக்கல் கொலினின் தலைப்பிடப்படாத 44 கவிதைகளைக் கொண்டுள்ள நூல். முன்னர் முகநூலில் இவை 44 தொடர்களில் வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றவை. இது வெறும் காதல் கவிதைகளின் தொகுப்பு மட்டுமல்ல. இவரது காதல் மனைவியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட கவிதைத் தொடரின் நூல் வடிவம் இதுவாகும். காதல் கவிதைகளுக்கூடாக எமது தொன்மங்களையும், தமிழர்தம் வாழ்க்கை முறைமையினையும், எமது மண்ணின் சரித்திரத்தையும் தேடும் முயற்சியாக காதலைச் சுமந்த ஒரு தொன்ம யாத்திரையாக இது அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோணேஸ்வரம், மாமாங்கேஸ்வரம், கல்லடி பாடும் மீன், சீகிரியா, சிவனொளிபாதமலை, கீழடி, அகஸ்தியர் ஸ்தாபனம், தாஜ்மஹால், தஞ்சைப் பெரியகோவில், சோழப் பேரரசு, தென்னவன் மரவடி, ஏதேன் தோட்டம், செவ்வாய்க் கிரகம், கன்னியா வெந்நீரூற்று, கம்போடியா ஹங்கோவாட், அம்பிகாபதி-அமராவதி, காதல்காவியம், ஆண்டாள், கிளியோபாட்ரா, சதுரங்கம், பரமபதம் என வரலாற்றையும் இணைத்து எழுதி, நவீன காதல் கவிதைகளில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவர ஆசிரியர் முனைந்துள்ளார். மகுடம் பதிப்பகத்தின் 60ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.