12659 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1970.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வதுபதிப்பு, மார்ச் 1971. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).


(8), 286, ஒஒூஎii பக்கம், 23 வரைபடங்கள், 30 அட்டவணைகள், விலை:
குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×17.5 சமீ.


நாணய விதிச் சட்டத்தின் (422ஆம் அத்தியாயம்) 35(1)ஆம் பிரிவின்
ஏற்பாடுகளுக்கிணங்க வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினது 21ஆவது ஆண்டறிக்கை இது. நான்கு பிரிவுகளாயமைந்துள்ளஇவ்வறிக்கையின் முதற் பிரிவில் பொருளாதாரச் செயலாற்றல் பிரச்சினைகள்,கொள்கைகள்-1970 (பொருளாதாரச் செயலாக்கம், சென்மதி நிலுவைப் பிரச்சினை)ஆகிய தலைப்புகளிலும், இரண்டாவது பிரிவில் பொருளாதார நிதிப்போக்குகள்-1970 (தேசிய உற்பத்தியும் செலவும், கைத்தொழில் உற்பத்தி, அரசாங்கத்
தொழில் முயற்சிகள், பணம், வங்கித் தொழில்ஆகியவற்றின் அபிவிருத்திகள்,
கிராமியக் கொடுகடன்கள், அரசாங்க நிதி, சென்மதி நிலுவையும் வெளிநாட்டுஇருப்புச் சொத்துக்களும் சுற்றுலாவும், விலைகளும் கூலிகளும், வேலை தொழில்உறவுகளும், வெளிநாட்டு வர்த்தகம் ஆகிய தலைப்புகளிலும், மூன்றாவது பிரிவில்மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடும் என்ற தலைப்பிலும், நான்காவதுபிரிவில் அலுவலகப் பணியாளர் என்ற தலைப்பிலும் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது.சேர்க்கை இலக்கம் 4552).

ஏனைய பதிவுகள்

12321 – சுற்றுநிருபம்: தமிழ் மொழித் தினம்-1998.

கல்வி உயர்கல்வி அமைச்சு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி, உயர் கல்வி அமைச்சு, இசுருபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). (2), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

Book Of Ra Gewinne

Content Wie Viel Kann Ich Mit Book Of Ra Gewinnen?: beste boni im online-casino Mit Zehn Aktiven Gewinnlinien Spielen Alle Slot Erfahrungsberichte Wie Man In

14313 சான ;றுக் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 14).

நீதி அமைச்சு. கொழும்பு: நீதி அமைச்சு, இலங்கை அரசாங்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்). (2), 96 பக்கம், விலை: ரூபா 165.00, அளவு: 24×15 சமீ. சான்று