12662 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1976.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).

(10), 55, lxxxiii+iv பக்கம், 7 வரைபடங்கள், 21 அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×16 சமீ.

நாணய விதிச் சட்டத்தின் (422ஆம் அத்தியாயம்) 34(1)ஆம் பிரிவின் ஏற்பாடு களுக்கிணங்க வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 27ஆவது ஆண்டறிக்கை இது. இவ்வறிக்கையில் பொருளாதாரச் செயலாற்றமும், சிக்கல்களும் கொள்கைகளும் -1976 என்ற பிரிவில் பாரளாதார வளர்ச்சி, விலைகளும் கூலிகளும், தொழில் நிலை, வெளிநாட்டு வர்த்தகம், சென்மதி நிலுவை, அரசின் இறைத் தொழிற்பாடுகள், நாணய வங்கித் தொழில் அபிவிருத்திகள் ஆகிய தலைப்புகளில் அறிக்கையிடப்பட்டுள்ளன. தொடர்ந்து மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும், ஆளணி ஆகிய தலைப்புகளில் அறிக்கையிடப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக இலங்கை மத்திய வங்கியினதும் வங்கி நிறுவனங்களினதும் கடமைகளையும் தொழிற்பாடுகளையும் பற்றி 1976ஆம் ஆண்டில் இலங்கையின் தேசிய அரச பேரவையால் இயற்றப்பட்ட முதன்மைச் சட்டவாக்கங்கள், 1976ஆம் ஆண்டில் நாணயச்சபை மேற்கொண்ட முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் என்பன அறிக்கையிடப்பட்டுள்ளன. இறுதிப் பிரிவில் புள்ளிவிபர அட்டவணைகள் தேசிய உற்பத்தியும் செலவும், பணமும் வங்கித் தொழிலும், அரசநிதி, வெளிநாட்டு நிதி, வெளிநாட்டு வர்த்தகம், விலைகளும் கூலிகளும் ஆகிய தலைப்புகளின்கீழ் இடம்பெற்றுள்ளன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31124).

ஏனைய பதிவுகள்

Book Of Ra Kasino Tricks

Content Win wizard Slot Free Spins | ++neu++ Book Of Novo Automaten Spiele Ra Tricks 2020 Book Of Ra Triumph Liste 2024 Worin Besteht Das