12664 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1980.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1981. (கொழும்பு: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).

(10), 169 பக்கம், civ, 38 அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×16.5 சமீ.

31ஆவது ஆண்டாகத் தயாரிக்கப்பட்ட 1980ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை இதுவாகும். 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையின் முதலாவது பிரிவில் பொருளாதார செயலாற்றமும், சிக்கல்களும் கொள்கைகளும்-1980, வேளாண்மை, கைத்தொழில், பொருளாதார சமூக நலன்புரிச் செலவுகள், தொழில்நிலை, சுற்றுலாத்துறை, அரசின் இறைத் தொழிற்பாடுகள், பணமும் வங்கித் தொழிலும் ஆகிய எட்டு விடயங்கள் பற்றிய அறிக்கை இடம்பெறுகின்றது. 2வது பிரிவில் மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும், 3வது பிரிவில் 1980ஆம் ஆண்டின் முதன்மையான நிர்வாக வழிமுறைகளும், 4வது பிரிவில் 1980ஆம் ஆண்டின் முதன்மைச் சட்ட ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4558).

ஏனைய பதிவுகள்