12675 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2010.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு: பிரின்ட் கெயார் பக்கேஜிங் லிமிட்டெட், 21, ஸ்ரீ புஷ்பராம மாவத்தை, பாஹல பியன்வில, கடவத்தை).

(30), 212+123+115+8 பக்கம், 147 அட்டவணைகள், விலை: ரூபா 350.00, அளவு: 27×20 சமீ., ISBN: 978-955-575-215-2.

இவ்வறிக்கை நான்கு பிரிவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 1வது பகுதியில் பொருளாதாரம், விலை மற்றும் நிதியியல் முறைமை, உறுதிப்பாடு, தோற்றப்பாடு மற்றும் கொள்கைகள், தேசிய உற்பத்தியும் செலவினமும், பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விலைகளும் கூலிகளும், தொழில்நிலை மற்றும் உற்பத்தித் திறன், வெளிநாட்டுத்துறை அபிவிருத்திகளும் கொள்கைகளும், இறைக் கொள்கையும் அரச நிதியும், நாணயக் கொள்கைகள், பணக் கொடுகடன் மற்றும் வட்டி வீதங்கள், நிதியியல்துறை முறைமையும் உறுதித்தன்மையும் ஆகிய 10 தலைப்புகளின் கீழ் அறிக்கையிடப்பட்டுள்ளது. 2வது பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும், பகுதி 3இல் 2010ஆம் ஆண்டில் நாணயச் சபையால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிர்வாக வழிமுறைகள், 4வது பகுதியில் மத்திய வங்கியினதும் இலங்கையிலுள்ள வங்கித் தொழில் நிறுவனங் களினதும் செயற்பாடுகளுடனும் தொடர்பான 2010ஆம் ஆண்டின் சட்டவாக்கங்கள் ஆகியன அறிக்கையிடப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49979).

ஏனைய பதிவுகள்

Scratch Honor Solution Requirements

Content Play Together, Stand Together with her Discuss one thing related to Megascratch Gambling establishment together with other players, express your own viewpoint, otherwise score

16887 இறவாப் புகழுடையோன்.

மலர்க் குழு. திருக்கோணமலை: ஏற்பாட்டுக் குழு, கிளிவெட்டி மேம்பாட்டு ஒன்றியம், 1வது பதிப்பு, 2022. (திருக்கோணமலை: பென் விஷன் (Ben Vision) அச்சகம்). xi, 280 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5