இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு: பிரின்ட் கெயார் பக்கேஜிங் லிமிட்டெட், 21, ஸ்ரீ புஷ்பராம மாவத்தை, பாஹல பியன்வில, கடவத்தை).
(28), 240+101+92+32 பக்கம், 148 அட்டவணைகள், விலை: ரூபா 400.00, அளவு: 27ஒx20.5 சமீ., ISBN: 978-955-575-262-6.
இவ்வறிக்கை நான்கு பகுதிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில், பொருளாதாரம், விலை மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு தோற்றப்பாடு மற்றும் கொள்கைகள், தேசிய உற்பத்தியும் செலவினமும், பொருளாதாரம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விலைகள், கூலிகள், தொழில்நிலை மற்றும் உற்பத்தித்திறன், வெளிநாட்டுத்துறை அபிவிருத்திகளும் கொள்கைகளும், இறைக் கொள்கைகளும் அரச நிதியும், நாணயக் கொள்கை, பணம் கொடுகடன் மற்றும் வட்டி வீதம், நிதியியல்துறை செயலாற்றமும் முறைமை உறுதிப்பாடும் ஆகிய விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில், இலங்கை மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும், மூன்றாவது பகுதியில், 2012ஆம் ஆண்டில் நாணயச் சபையால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிர்வாக வழிமுறைகள் என்பனவும், நான்காவது பகுதியில், மத்திய வங்கியினதும் இலங்கையிலுள்ள வங்கித் தொழில் நிறுவனங்களினதும் செயற்பாடுகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான 2012ஆம் ஆண்டின் முக்கிய சட்டவாக்கங்கள் என்பனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 53526).