தம்பையா லங்காநேசன். கொழும்பு 6: குமரன் புத்தக
இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக
இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 306 பக்கம், அட்டவணை, விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ.,ஐளுடீN:978-955-659-541-3.
திட்டமிடல், கருத்திட்டத்தின் அறிமுகம், இலங்கையில் கருத்திட்டங்களை
இனங்காணும் மூலங்கள், கருத்திட்டத்தை இனங்காண்பதற்கான அணுகுமுறைகள்,கிராமிய அபிவிருத்திக் கருத்திட்டங்களை திட்டமிடும் அணுகுமுறைகள், இலக்குகுறிக்கோள்கள்-கருத்திட்டம் நிகழ்ச்சித் திட்டம்- எடுகோள்கள்- அமுலாக்கத்தைக்கட்டுப்படுத்தும் காரணிகள், கருத்திட்டச் சக்கரம், கருத்திட்டச் சாத்திய வளஆய்வு,தேவைகளை இனங்காணல், குறிக்கோள்களை வரையறுத்தல், வேலைத்திட்டம்,வரவு-செலவுத் திட்டம், கருத்திட்டம் வடிவமைப்பு, கருத்திட்ட மதிப்பீடு,கருத்திட்ட அமுலாக்கத்திற்கு திட்டமிடல், கருத்திட்ட முகாமைத்துவம், கருத்திட்டமேற்பார்வையும் கட்டுப்பாடும், கண்காணிப்பு, கருத்திட்ட மீளாய்வு, கருத்திட்டவடிவமைப்பு வழிகாட்டி, கருத்திட்ட வரைவு, கருத்திட்டங்களின் வெற்றிக்கும்
தோல்விக்குமான காரணிகள் ஆகிய 22 அத்தியாயங்களில் கருத்திட்ட
முகாமைத்துவம் (Pசழதநஉவ ஆயயெபநஅநவெ) பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.தம்பையா லங்காநேசன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பட்டதாரி.35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசபணியில் ஈடுபட்டவர். அரசாங்க அதிபர், பலதேசிய அமைச்சுகளின் மேலதிகச் செயலாளர், பதில் செயலாளர் ஆகிய பதவிகளை
வகித்தவர். சேவைக்காலத்தில் வெளிநாடுகளும், சர்வதேச நிதி நிறுவனங்களும்நிதியிட்ட பத்து கருத்திட்டங்களின் திட்ட முகாமையாளராகப் பணியாற்றியஅனுபவம் இந்நூலை எழுத இவருக்கு உதவியுள்ளது.