வேலுப்பிள்ளை அம்பிகைபாகன். இந்தியா: தென்னாசிய சமூக விஞ்ஞான நிதியம், குமேயோன் ஹில்ஸ், அல்மோறா, இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: காங்கேயன் கலைக்கோட்டம், ராஜசில்பி விலாட சங்கிலியின் மரபுவழி நிறுவகம், கலாபவனம், விஸ்வகர்ம வட்டம், தேவாலய வீதி, உடுப்பிட்டி, 1வது பதிப்பு, ஜுன் 2009. (யாழ்ப்பாணம்: தமிழ்ப் பூங்கா அச்சகம், நெல்லியடி, கரவெட்டி).
xxi, 72, xxiv பக்கம், புகைப்படங்கள், 24 தகடுகள், விலை: ரூபா 600., அளவு: 24×17 சமீ.
கலாதேவன் கோவிந்தராஜு ஸ்தபதி: ஓர் அறிமுகம், யாழ்ப்பாணியின் எதிர்க் கருத்துக்கள் விமர்சனம், கைலாசநாத விநாயகர் தேர் நிர்மாணம், நீர்வேலி வாய்க்காற்றரவை விநாயகர் தேர், நல்லூர் முருகன் அலங்காரச் சித்திரத்தேர், தேர் வடிவமைப்புத் திறனும் பொதுப் பண்பும், கோபியும் நந்தாவில் மனோன்மணி தேர்ப்பணியும், வண்ணார்பண்ணைக் காமாட்சி தேர்ச்சிற்பம், யாழ்ப்பாணத் தேரில் உயர்நிலைச் சிற்பியாக, யாழ்ப்பாணியின் சார்புநிலைக் குழுக்களும் மாணவர்களும், இரு தேர் மகாஸ்தபதிகள் காலதேவனும் கலாகேசரியும், மகா கோபியம், மகாஸ்தபதி கோபி அவர்களுக்கு ஓர் கடிதம், இந்தியத் தேர் மகாஸ்தபதி களுடன் கோபி ஓர் ஒப்பீடு ஆகிய 14 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவி விரிவுரையாளர் வேலுப்பிள்ளை அம்பிகைபாகன், வடமராட்சி வலயத்தின் முறைசாராக் கல்வி செயற்றிட்ட அலுவலராகப் பணியாற்றுகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51037).