16511 கண்ணீரில் கரைகிறது காலம்.

கா.தவபாலன் (இயற்பெயர்: காசிப்பிள்ளை தவபாலச்சந்திரன்). முள்ளியவளை: காசிப்பிள்ளை நற்பணி மன்ற வெளியீடு, கணுக்கேணி கிழக்கு, 1வது பதிப்பு, வைகாசி 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xx, 104 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-955-43867-4-7.

இந்நூலில் கலாபூஷணம் கவிஞர் கா.தவபாலனின் சுவையான கவிதைகள் இடம்பெற்றுள்ளன. சமூகத்தில் நாம் சந்தித்த துயரங்களை, அவலங்களை உருவகமாகத் தனது கவிதைகள் மூலம் இங்கு இலகு நடையில் சாதாரண மக்களும் விளங்கி இரசிக்கும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார். இத்தொகுப்பில், மக்களின் ஏக்கம் தீரவில்லை என்ற முதலாவது கவிதையில் தொடங்கி ஓய்வின்றி உழைப்பவள் பெண் என்ற இறுதிக் கவிதை வரை எழுபத்தியொரு கவிதைகளை பதிவுசெய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

17046 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 38ஆம் ஆண்டு ஆட்சிக் குழு பொது அறிக்கை (1979-1980).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1980. (அச்சக விபரம் தரப்படவில்லை). 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14932 நாவலர் சரித்திர ஆராய்ச்சி.

பொன்.பாக்கியம். வட்டுக்கோட்டை: வட்டுக்கோட்டை தமிழ்ச் சங்கம், பண்ணாகம், சுழிபுரம், 1வது பதிப்பு, ஜுலை 1970. (யாழ்ப்பாணம்: சுசீலாதேவி அச்சகம், சித்தன்கேணி). 113 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 2.50, அளவு: 22×14 சமீ. ஆறுமுக