வட்டக்கச்சி வினோத். வட்டக்கச்சி: தொலைநோக்கி வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xiv, 65 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-43466-0-4.
“வடஇலங்கையின் நீரேந்துப் பிரதேசமான இரணைமடுக் குளக்கரையில் அமைந்திருக்கும் வட்டக்கச்சியில் பிறந்தவர் வினோத். சமூகப் பிடியின் பரப்புகளில் காணுகின்றவற்றை தனது அடிமனசின் ஆழத்திலிருந்து அடிக்கடி உந்திவிடப்படும் வரிகளால் தொகுத்து முதலாவது கன்னிக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். காலம் என்பது நதியைப் போல நகர்ந்துகொண்டே இருக்கும். எப்பொழுதும் அது திரும்பி வருவதில்லை. அதில் பல நெளிவு சுழிவுகளும் தடைகளும் இருந்தாலும் இடர்களைத் தாண்டிக் கடலை அடையும் என்பது நியதி. ஆகையினால் தனது வாழ்வின் ஓரத்து எண்ணவோட்டத்தை “காலநதி” யாக எமது கைகளில் தந்திருக்கிறார். முகநூல் கவிஞராக இலக்கிய இளவல்களோடு கைகோர்த்துக் கொண்டவர். உணர்ச்சிவசப்படாத நிதானக் கவிஞராக என்னால் இனங்காணப்பட்டவர்.” (வே.முல்லைத்தீபன்).