16523 கிராமத்துக் குதூகலம்.

சாய்ந்தமருது M.I.M. அஷ்ரப். சாய்ந்தமருது-7: M.I.M. அஷ்ரப், கலாசார உத்தியோகத்தர், 489, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (மருதமுனை: அப்பெக்ஸ் பிரின்டர்ஸ்).

140 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-44371-1-1.

“இன்னும் உயிரோடு” என்ற கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து வெளிவரும் ஆசிரியரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. ஏற்கெனவே இவரது சிறுகதைத் தொகுப்பொன்று “உறங்காத உண்மைகள்“ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இக்கவிதைத் தொகுதியில் மொத்தம் 61 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் பல்வேறு கோணங்களில் இருந்து வெவ்வேறு விடயங்களைச் சொல்கின்ற போதிலும் கிராமத்துச் சாயலில் வந்துள்ள கவிதைகள் தூக்கலாகக் காணப்படுகின்றன. இன்று எம்மால் காணமுடியாது காணாமல் போய்விட்ட அன்றைய கிராமத்தின் மலரும் நினைவுகளை இரைமீட்கும் வகையில் இடம்பெற்ற ‘கிராமத்துக் குதூகலம்” என்ற கவிதையின் தலைப்பே இந்நூலின் தலைப்பாகியுமுள்ளது.

ஏனைய பதிவுகள்

11124 கற்போத மஞ்சரி.

வண்ணைநகர் ஸ்ரீ க.வைத்தியலிங்க பிள்ளை. யாழ்ப்பாணம்: யாழ். செந்தமிழ்ப் பரிபாலன யந்திரசாலை, 1வது பதிப்பு, 1926. (அச்சக விபரம் தரப்படவில்லை). 43 பக்கம், விலை: 25 சதம், அளவு: 19×13 சமீ. ஆலய வழிபாட்டின்

13250 மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிச் செய்த திருவாசகத்தேன்-எட்டாந் திருமுறை.

மாணிக்கவாசக சுவாமிகள் (மூலம்), இராசையா ஸ்ரீதரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: இராசையா ஸ்ரீதரன், 291, நாவலர் வீதி, ஆனைப்பந்தி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). iv,