16533 சுதந்திரக் காற்று: கவிதைகள்.

கா.தவபாலன்; (இயற்பெயர்: காசிப்பிள்ளை தவபாலச்சந்திரன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜ{லை 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xvi, 17-84 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43867-2-3.

கவிஞர் கா.தவபாலனின் கவிதைகளில் அவரது மனப்பதிவு, மன அவசம், சமூக உறவுநிலை, அரசியற் சிந்தனைகள்,  பிரதேச வாழ்வியல், சமகாலச் செய்திகள் என்பன பேசப்படுகின்றன. பல கவிதைகள் யுத்தகால அவலங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. சுதந்திரக் காற்று, அகதியின் கையறுநிலை, ஏங்குகின்றார் எம் மக்கள், காணவில்லை, அகதியின் உள்ளக் குமுறல், தென்றலும் புயலும், எங்குதான் போவோம்?, கறையான்கள், பருந்தும் கோழிக்குஞ்சுகளும், அகதியின் டயறி, காணாமற் போனோர், யுத்தமே உனக்கு நன்றி, மக்களின் ஏக்கம் தீரவில்லை, பீனிக்ஸ் பறவைகள், ஆக்கிரமிப்பு, குரலற்ற மனிதர்கள், வீதிகளில் விசர் நாய்கள், அரங்கேறும் அநியாயம், நூறு வருடங்களின் பின், வேலையற்ற பட்டதாரிகள், பாவமும் புண்ணியமும், பரம இரகசியம், சங்கிலி, எண்ணப்பறவை, சோஷலிசம், பின்தங்கிய மக்களின் பிரச்சினைகள், நான் இலங்கையின் ஜனாதிபதியானால், குடியிருந்த வீடு, இடப்பெயர்வு, மக்களின் குரல், நாம் ஊருக்குப் போகிறோம், பயங்கரப் பயணம், மண்ணை நேசிப்போம், மக்களாட்சி மலரட்டும், பரிதவிப்பு, மறுபக்கம், கிராமமும் நகரமும், றோட்டு, பாம்பு, சாதியம், நாம் யார் தெரியுமா?, அரசியல் தீர்வு ஆகிய 42 கவிதைகளும், “தாய்” தொடங்கி “யார் இவள்” ஈறாக 77 கவிதைத் துளிகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 79ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

15902 இலங்கை முஸ்லிம் அரசியலில் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் தலைமைத்துவம்.

ஆதம்வாவா சர்ஜுன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 218 பக்கம், விலை: