அபு அப்றிட். நாவிதன்வெளி: தேடல் பதிப்பகம், 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xvi, 80 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19×14 சமீ., ISBN: 978-624-97923-3-3.
நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அபு அப்றிட் கவித்துவப் புலமை கொண்ட ஒரு பரம்பரையின் வழி வந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கட்டிட நிர்மாணத் தொழில்நுட்பவியல் துறையில் இறுதியாண்டு மாணவராக இருந்த வேளையில் இத்தொகுதியை வெளியிட்டிருந்தார். இத்தொகுதியில் இவரது 50 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் சில சமூகவியல்சார்ந்த கவிதைகளும் உள்ளன. அவை போராடும் காலம், முகமூடிகள், மூழ்கிடும் உலகு, கல்வி வியாபாரம், இயற்கையும் இறக்கிறது, படு குழியில் மனிதம், நச்சு மனிதர்கள், கொடுத்துண்ணு, உச்சம் தொடும் விலைவாசி என பல்வேறு தலைப்புகளில் பிரகாசிக்கின்றன. இயற்கையை நேசிக்கும் கவியுள்ளம் கொண்ட இவரது கவிதைகளில் அந்த உணர்வு தூக்கலாகத் தெரிகின்றது. கவிஞர் இடையிடையே காதலையும் பாடத் தவறவில்லை.