நெடுந்தீவு முகிலன். சென்னை 600017: கற்பகம் புத்தகாலயம், நடேசன் பூங்கா அருகில், தி.நகர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (சென்னை 600 005: சுப்ரா பிரின்டெக்).
88 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 40.00, அளவு: 18×12 சமீ.
பொதுவாக பொம்மைகளை குழந்தைகள் விளையாடுவார்கள். காதலர்களும் ஒரு வகையில் குழந்தைகளே. ஆதலினாலோ என்னவோ பொம்மைகளை காதலர்களும் விளையாடுகிறார்கள். குழந்தைகளின் பொம்மை விளையாட்டுக்கும் காதலர்களின் பொம்மை விளையாட்டுக்கும் இடையே வித்தியாசங்கள் இருக்கின்றன. குழந்தைகள் பொம்மைகளை விளையாடும்போது விளையாட்டாகவே விளையாடுகிறார்கள். காதலர்கள் பொம்மைகளை விளையாடும்போது பொம்மைகளை காதலர்களாக்கி விளையாடுகிறார்கள்.