சுவஸ்திகா ராஜ்பிரகாஷ். கொழும்பு: சுவஸ்திகா ராஜ்பிரகாஷ், 1வது பதிப்பு, நவம்பர் 2022. (கொழும்பு: விஜயா கிராப்பிக்ஸ்).
48 பக்கம், விலை: ரூபா 375., அளவு: 22×16 சமீ., ISBN: 978-624-99734-0-4.
கொழும்பு விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான சுவஸ்திகாவின் முதலாவது கவிதைத் தொகுதி. பிறப்பது பொறுப்பு, முயற்சியே பயிற்சி, இறைவன் இருக்கிறான், எண்ணமே வாழ்க்கை, வாய்ப்புகள், தான தர்மம் ஒரு தவம், ஏடுகள் ஏந்திட, திட்டமிடு, அவமானங்கள், வறுமைப் பாடம், பசிக்கிடு தீனி, எதிர்த்து நில், இடையில் ஒரு பருவம், காதலித்துப் பார்க்கலாம், சற்றே பொறு, ஏமாற்றம் மாறுமோ?, எது வலிமை, திறமைக்கு முதலிடம், தோல்வியிடமிருந்து, உறுதி, கலையாத கனவு, செயலாகும் பெயர், தனிமையிலே, போராடினால், நாடோடியாக, நேரம் பார், படை பலம், பயணத்தில், பாதத் தடங்கள், தேடலின் விடை, விதி மதியறி, மரணத்தில் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69974).