வசீகரன் சித்திவிநாயகம். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, மே 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xx, 104 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-4096-08-0.
யாழ்ப்பாணம் அல்வாயைச் சேர்ந்த வசீகரன், புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். இக்கவிதைத் தொகுதியில் இவர் எழுதிய நீங்கள் வேண்டும், கூட்டுத் தாக்குதல், அழகிய வந்தனம், பொங்கல், உயிர்ப்பூ, தவிப்பு, அன்பு, கொடி மல்லிகை, அம்மா, உழவர் திருநாள், ஒற்றையடிப் பாதை, தட்பநிலை, தனிப்பறவை, டெங்குக் காய்ச்சல், நம்பிக்கை, இறங்குதுறை, ஊடல் கற்பூரவாசம், மாணவ மாணவிகள், தூறல், முறிந்த கறுத்தக் காப்பு, ஆட்டுக்குட்டி, தீப்பந்தம், காற்று, வலிய வந்த வலி, சங்கிலித் தோப்பு, கவித் தவிப்பு, இரும்பு மங்கை, தமிழ், பெரிய பிராட்டி, நினைந்திடுவோம், கிறிஸ்மஸ், ஏறு தழுவல், மாசில்லாதவன், அன்பால், காதலி, அங்காடி, தங்கச்சி, இலை உதிர் காலம், மண்ணும் மானமும் இறுதி ஊர்வலம், குழந்தை, வானவில், தமிழ்ப் புதுவருடம், சிட்டுக்குருவி, காடு, யுகம், உருமாற்றம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 47 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.