16562 பேரன்பின் படிமங்கள்.

வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). நயினாதீவு: பாலசுந்தரம் ரஜிந்தன், ஆசிரியர், யா/நயினாதீவு ஸ்ரீ கணேசா கனிஷ்ட மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஜனவரி 2022. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

x, 103 பக்கம், விலை: ரூபா 299., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-624-97399-2-5.

தமிழின் மிது கொண்ட ஆத்மீகப் பற்றுதலும் கவிதை மீது கொண்ட தீராக் காதலும் தனது ஐந்தாவது படைப்பான பேரன்பின் படிமங்கள் கவிதைத் தொகுப்பு உருவாகுவதற்கான ஊற்றுக்கண்ணாக அமைந்ததென்கிறார் இக்கவிஞர். “தீரா அன்பின் தேடலும், ஏக்கமும் கொண்டாட்டமும் நிறைந்தவை ரஜிந்தனின் இப்பேரன்பின் படிமங்கள். இவற்றின் நிகழ்கணங்கள் பலவற்றை நீங்கள் வாழ்வில் பலமுறை சந்தித்திருப்பீர்கள். அன்பினைக் காவி வரும் இக்கவிதைகளின் சொற்களுக்கு அலையின் லாவகம்“ என்று இந்நூலிற்கான பின்னட்டைக் குறிப்பில் வரைந்திருக்கிறார் வேலணையூர் தாஸ். விசேடக் கல்வி ஆசிரியரான பாலசுந்தரம் ரஜிந்தன், ஈழத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை யில் பிறந்து வேலணையூர் ரஜிந்தன் எனும் பெயரில் கவி படைத்து வருகின்றார். கவி ஆர்வம் கவித்துவம் பல காலமாக தன்னுள் அடைபட்டுக் கிடந்தாலும் கடந்த சில வருடங்களாக கவிதைத் துறையில் கலைஞனாக வலம் வரும் வேலணையூர் ரஜிந்தன் யாழ்.இலக்கிய குவியத்தினுடாக சமூகத்தில் கவிதை நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கெடுப்பதோடு, வேலணை துறையூர் கலை இலக்கிய வட்டத்தின் தலைவராகவும் இளைய தலைமுறையினரை ஊக்குவித்தும் வருகின்றார். முகநூல் குழுமங்களில் அதிக கவிதைகளை எழுதி 150 இற்கு மேற்பட்ட பல சான்றிதழ்களும் பல விருதுகளும் பெற்று தனது கவிதைப் பயணத்தினை தீவிரமாகத் தொடர்கின்றார். 

ஏனைய பதிவுகள்

15987 தொன்ம யாத்திரை: மரபுரிமைகளை அறிவதற்கும் கொண்டாடுவதற்குமான இதழ்: அங்கணாமக்கடவை.

யதார்த்தன், பிரிந்தா (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: தொன்ம யாத்திரைக் குழுமம், விதை குழுமம், அக்கினிச் சிறகுகள், 1வது பதிப்பு, புரட்டாதி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). 31 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு:

Studere Yderligere

Content Et Meget vel Nyt Isvinter : Spændingsroman Børnenes Danmarksindsamling Orddannelser Dette garanterer atalle elever som klassen lærer at gennemlæse, dersom hver discipel har acces