16563 மகடூஉ 100: நூறு பெண் கவிஞர்களின் கவிதைகள்.

அருணா சுந்தரராசன் (தொகுப்பாசிரியர்). மானாமதுரை 630-606: வளரி எழுத்துக் கூடம், 32, கீழத்தேர் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

112 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 22×15 சமீ.

“மகடூஉ” என்பது பெண்ணைக் குறிக்கும் சங்ககாலத்தில் நிலவிய ஒரு சொல்லாகும். உலகெங்கும் வாழும் பெண் கவிஞர்களின் 100 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவர்களிடையே பின்வரும் இலங்கை எழுத்தாளர்களும் அடங்குகின்றனர். ஆதினி-திருக்கோணமலை (கொற்றவை நீயாகு), அநாமதேய அஞ்சலி (அவளும் அவள் சாயலும்), பாமினி செல்லத்துரை (இன்றைய மகிழ்வு), பா.கோசல்யா-இரக்குவானை (யார் நீ?), பாத்திமா நளீரா-கொழும்பு (புன்னகையின் கனவுகள்), ஜே.ஜே.சுகன்யா-யாழ்ப்பாணம் (தாய்மை), ஹிபானியா பௌசுல்-நேகம (என் பள்ளித்தோழி), எஸ்.யூ.கமர்ஜான் பீபீ (மங்கையர் மகிமை).

ஏனைய பதிவுகள்

13880 ஈழத்து சைவசித்தாந்த அபிவிருத்திப் பணியில் சேர்.பொன் இராமநாதன் (1930-1951).

கலைவாணி இராமநாதன். யாழ்ப்பாணம்: திருமதி. கலைவாணி இராமநாதன், இந்து நாகரிகத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (யாழ்ப்பாணம்: அகரம் கணனிப் பதிப்பகம், பிரவுண் வீதி, தொழில்நுட்பக் கல்லூரி முன்பாக).

9692 திசைகாட்டி மரம்: ஈழத்து சிறுகதைகள்.

வடலி குழுவினர். சென்னை 600078: வடலி வெளியீடு, எண் 6/13, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர். நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 126 பக்கம், விலை: இந்திய ரூபா 150.,