16565 மணிக்கவிகள்.

வி.கந்தவனம். கனடா: கவிஞர் வி.கந்தவனம் மணிவிழாக் குழு, ரொறன்ரோ, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×11.5 சமீ.

கவிஞர் வி.கந்தவனம் அவர்களின் மணிவிழா வெளியீட்டு வரிசையில் நான்காவதாக வெளிவரும் பிரசுரம் இது. அர்த்தமுள்ள அறுபது ஆண்டுகளின் நிறைவாக இங்கே அர்த்தமுள்ள அறுபது கவிமணிகள் இடம்பெற்றுள்ளன. உருவகச் சிறப்பில் மாத்திரை போன்ற இவை உள்ளடக்கத்தில் காத்திரம் கொண்டவை. இந்த மணிக்கவிகள் 1993இல் தாயகம் சஞ்சிகையில் வாராவாரம் தொடராக வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாதிரிக்குச் சில மணிக்கவிகள்:

“உள்ளப் பக்குவ உயர்வினை நல்கா

வெள்ளைக் கல்வி வேண்டுவ தார்க்கு”. (4)

“பார்மகள் இழந்தாள் பகுத்தறி வற்ற

போர்களின் விளைவால் பூவும் பொட்டும்” (8)

ஏனைய பதிவுகள்