16584 விண்ணதிர் பரணி.

டிலோஜினி மோசேஸ். மருதங்கேணி: பிரதேச கலாசாரப் பேரவை, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2 ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xi, 60 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42717-1-5.

மருதங்கேணி, கட்டைக்காட்டைச் சேர்ந்த சட்டத்துறை மாணவியான டிலோஜினி மோசேஸ் எழுதியுள்ள இக்கவிதைகள் தான் காணும் துயர்களின் வலியை, ஏக்கங்களின் தாகத்தை,  ஏமாற்றங்களின் பிரதிபலிப்பை,  காலத்தின் கொடுமையை, கனவுகளின் எல்லையை அகவிசாரணைக்கு உட்படுத்துகின்றன. சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பல விடயங்களை தன் கவிதை வரிகளுக்குள் இக்கவிஞர் கொண்டுவருகின்றார். கவிதைகளில் பரவலாக ஆச்சர்ய முடிச்சுக்களை வைத்து வாசகரை முடிச்சவிழ்க்கவும் வைக்கிறார். குலதெய்வங்கள், ஆத்துமாவின் ஆதங்கம், வாச முத்தம், மதங்களைத் துறத்தல், தொலைந்துயிர்த்தல், சிறைப்புறா, ஆதியிசை, காதலிப்போம், பெருங்காதல், உயிர் ஒளி, ஈரம், இரட்சிப்பு, நினைதல், யாவுமாகி, மனச்சிறை, நேசதேவதை, விடியாத கிழக்கு, கசாப்பு மன்றங்கள், ஆச்சர்யமானவள், அருவருப்பின் பானம், நிர்க்கதி, கேள்வித்தீட்டு, பூத்தலுக்காய், தீவிரவாதி, தேரவாதம், நீயும் வாழலாம், இளவரசி, முதல் காதலன், எனதான சூரியன், ஏன் அழுதாய் என் போல, நட்புப் பிள்ளையார், இராஜகுமாரன், கசங்கல் கவிதை, பச்சைகளின் தேசம், நினைவை கிளறல், இரசிக்காத மழை, வரலாற்றின் நிறம், நேரமில்லை, விண்ணதிர் பரணி, ஆசுவாசமென்பது, சடங்குகள், பியூலா ஆகிய 42 கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்

Casino On the web Sweden

Posts Are My personal Earnings Taxed At the Australian Gambling on line Internet sites?: top online bonus deuces wild 50 hand We Use the Most