16592 காட்டு நிலா : வானொலி நாடகங்கள்.

நா.யோகேந்திரநாதன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xviii, 126 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5881-15-4.

இந்நூலில் காட்டு நிலா, முன்னூற்று அறுபத்து மூன்றாவது உயிர், நிறம் மாறிய கிராமம், நெஞ்சாங்கட்டை, காத்திருக்கும் கடற்கரை ஆகிய ஐந்து வானொலி நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கை வானொலியில் “சானா” என்ற சண்முகநாதன் அவர்களுடன்ஆரம்பித்த சாதனைப் பயணம் பல ஒப்பற்ற கலைஞர்களின் பங்களிப்புடன் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. கே.எம்.வாசகரின் காலத்தில் “சுழியோட்டம்” என்ற நாடகத்துடன் தனது வானொலி நாடகக் கலைப் பயணத்தை ஆரம்பித்த நா.யோகேந்திரநாதன் பின்னர் பி.விக்னேஸ்வரன், ஜோர்ஜ் சந்திரசேகரன், காவலூர் ராஜதுரை, பி.எச்.அப்துல் ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், லூக்காஸ் திருச்செல்வம், தார்க்கீசன் போன்ற அற்புதமான திறமைசாலிகளுடன் இணைந்து தன்னைப் புடம்போட்டுக் கொண்டவர். அக்கால கட்டத்தில் தான் எழுதிய ஐந்து வானொலி நாடகங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Online slots games

Articles Absolve to Enjoy Igt Slot machine games Crazy Celebrity Bus Megaways On the web Slot Greatest 14 Free Slots No Obtain No Membership Greatest