16593 குணம் மாறும் எலிகள் : சமூக, அரசியல், பொருளாதார நாடகம்.

உரும்பிராய் வி.ஜெகநாதன் (புனைபெயர்: நக்கீரன்). யாழ்ப்பாணம்: வி.ஜெகநாதன், உரும்பிராய், 1வது பதிப்பு, மார்ச் 2019. (யாழ்ப்பாணம்: சக்தி பிரிண்டர்ஸ், பலாலி வீதி, உரும்பிராய்).

xv, (3), 30 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43879-1-1.

‘இது சிறுவர்களுக்காக சிறுவர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட நாடகமாயினும், சமூக, அரசியல், பொருளாதார நாடகமாகவும் இதனை வகைப்படுத்த முடிகின்றது. இந்த நாடகத்தைப் பொறுத்த வரையில் பிரச்சினைகள் வெளிப்படையாகவே முன்வைக்கப் படுகின்றன. இதில் சிறுவர்களது மனமகிழ்வுக்கான ஆற்றுப்படுத்தல்கள் – ஒரு சில இடங்களைத் தவிர – இல்லை என்றே தோன்றுகின்றது. இதனை சிறுவர் நாடகம் என்ற அடையாளப்படுத்தலை விடுத்து, சமூக அரசியல் நாடகம் என்ற  அரங்க வெளிக்கு எடுத்துச் சென்று மதிப்பீடு செய்தால், இதன் சமூகத் தாக்கங்களும், இந்நாடகம் சமூகத்திலும், நாட்டிலும் உள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதில் பயன்படுத்திய பாத்திர உருவாக்கமும் உற்றுநோக்கத்தக்கன. முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக மக்களினது அவல வாழ்வும், இந்த அவல வாழ்க்கையை அரசியலாக்கிப் பிழைப்பு நடத்தும் அயோக்கியத்தனங்களும், இவற்றுக்கெதிரான விவேகமற்ற உணர்ச்சிவசப்பட்ட போராட்டங்களும் தங்களின் பலத்தை உணராமல் இன்னும் இவைபோன்ற போலியான செயற்பாடுகளுக்குள் அள்ளுண்டு செல்வதும் தமது மீட்சிக்கான பாதையினை வகுத்துக்கொள்ளத் தெரியாத அப்பாவி எலிகளாக வாழ்வதும் மிகக் கச்சிதமாக எடுத்தியம்பப் படுகின்றது” (வ.மோகநாதன், அணிந்துரையில்).

ஏனைய பதிவுகள்

E aprestar na loteria Mega Millions online

Content Que FUNCIONA Briga BOLÃO DA LOTTOLAND? PAGAMENTOS Puerilidade PRÊMIOS Acercade Aglomeração | Casino Fu 88 Dicas para acrescer suas chances infantilidade abichar na Powerball