16596 சோலர் : தெருவெளி நாடக பிரதிகளின் தொகுப்பு.

எஸ்.ரி.அருள்குமரன். யாழ்ப்பாணம்: S.T.T.S.வெளியீடு, சங்கானை, 1வது பதிப்பு, சித்திரை 2021. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், பிரதான வீதி, சங்கானை).

v, 42 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-3688-04-0.

சோலர், தொற்றா நோய்கள், மாசு, சிக்கனம், வாழ்வதற்கு, உயிர்வாழ ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட தெருவெளி நாடகப் பிரதிகளை இந்நூல் கொண்டுள்ளது. இலங்கைத் தமிழ் நாடகப் பரப்பினுள் தாக்க வன்மையுள்ள நவீன நாடக அரங்கவியலாளராக எஸ்.ரி.அருள்குமரன் விளங்குகின்றார். நாடகத்துறை சிறப்புப் பட்டதாரியான இவர் நாடகத்துறையின் மீது கொண்ட தேடல் காரணமாகவும், புதிய சிந்தனைத் தளத்தில் நாடகப் படைப்புக்களினை படைப்பாக்கம் செய்து பலரதும் பாராட்டினைப் பெற்றுள்ளார். புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாக இயக்குநராகவும்  இவர் பணியாற்றி வருகின்றார். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நாடகத்துறைக்கான ஆசிரியராகவும் நாடக மன்றப் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றி மாணவர்களுக்கான செல்நெறிப் பயிற்சிகளை வழங்கி வருகின்றார். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26865).

ஏனைய பதிவுகள்

Arlequin Dans Argent Palpable

Satisfait s Sauf que Commentaires En compagnie de Gagner De La maille Effectif Í  du Hasard Comme gagner de l’brique à douze, 13, 11, 10