16597 தாய்மடி தேடிவந்தாள் ஒரு தாமரைக்கொடி (நாடகம்).

கீர்த்தி. (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2015. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

viii, 172 பக்கம், விலை: இந்திய ரூபா 80.00, அளவு: 18×12.5 சமீ.

இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்று சென்னைப் பல்கலைக்கழகம், வடக்கு லண்டன் பல்கலைக்கழகம், கிரினிச் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்விகற்று தற்போது லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்பவர் கீர்த்தி. காதல் தியாகம் என விரியும் இந்நாடகத்தில் இவர் தான் வாழ்ந்த யாழ்ப்பாணத்தின் வடபுறத்தில் அமைந்துள்ள செம்மண் விவசாய பூமியாகிய இளவாலைக் கிராமத்தையும் அதன் மக்களையும் இந்நாடக பாத்திரங்களாக உலவவிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

15185 தமிழ்த் தேசியம்- நெருக்கடிகளும் வாய்ப்புக்களும்.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: