16603 தான் விரும்பாத் தியாகி : குழந்தை ம.சண்முகலிங்கத்தின் மொழிபெயர்ப்பு நாடகங்கள் ஆறு.

நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 140 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-37-6.

”இத்தொகுதியில் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் மொழிபெயர்த்த ஆறு நாடகங்கள் வகுத்தும் தொகுத்தும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவை அவரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பின் மூல எழுத்துரவிற்கு அமைவாக பதிப்பிக்கப்பட்டுள்ளதோடு அவற்றில் உள்ள வேறுபாடுகள், செய்யப்பட்ட மாற்றங்கள், மற்றும் நாடக எழுத்துரு சார்ந்த முக்கியமான விபரங்கள் போன்றன குறிப்பகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் உள்ள மொழிபெயர்ப்பு நாடகங்கள் எவ்விதமான சிறப்புரிமை கருதியும் ஒன்றாகத் தொகுக்கப்டவில்லை எனினும் அவற்றுக்கிடையில் ஒரு ஒற்றுமை நிலவுவதனையும் அவதானிக்க முடிகின்றது.” (நா.நவராஜ், பதிப்புரையில்). இந்நூலில் இரவலன் அல்லது இறந்துபோன நாய், வார்த்தைகளற்ற நடிப்பு, இந்திரன் தீர்ப்பு, தான் விரும்பாத் தியாகி ஒருவர், அந்திமாலைப் பாடலொன்று, துறவி ஆகிய ஆங்கில நாடகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளன. இந்நூல் 209ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Free Mega Moolah Ports

Content Finest Real money Super Moolah Casinos on the internet Sort of Online slots games Coba Pilih ten Rekomendasi Position Gacor Terpercaya Gampang Menang Yang