16615 அதிர்ஸ்டம் (சிறுகதைத் தொகுப்பு).

கே.எம்.எம். இக்பால். கிண்ணியா 4: கே.எம்.எம். இக்பால், அப்துல் மஜீத் எம்.பி. வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2019. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

v, 106 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ.

இந்நூலில் இரண்டு லட்சம், தாயின் மேல் ஆணை, மீண்டும் மலர்ந்த மலர், கண்ணீர்த் துளிகள், இரட்டைச் சந்தோசம், கல்யாணப் பரிசு, அறிவுக் கண், நூறு ரூபாய், ஒரு தடவை மட்டும், புத்தாண்டுப் பரிசு, அதிர்ஸ்டம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பதினொரு கதைகள் இடம்பெற்றுள்ளன. மக்களுக்கு பயன்படக்கூடிய விதத்தில் சிறுகதைகள் அமையவேண்டும் என்றும் சிறுகதையில் உள்ள கரு, மனிதனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக அமையவேண்டும் என்றும் ஆசிரியர் கருதுகின்றார். இத்தொகுப்பில் இடம்பெறும் “கண்ணீர்த் துளிகள்”, “நூறு ரூபாய்” என்பன வறுமையின் கோர தாண்டவத்தைப் பிரதிபலிக்கின்றன. “கல்யாணப் பரிசு”, “அதிர்ஸ்டம்” என்பன அகதி வாழ்வு எற்படுத்திய காயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ‘மீண்டும் மலர்ந்த மலர்” என்ற சிறுகதை இன ஒற்றுமையின் அவசியத்தை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைக்கின்றது.

ஏனைய பதிவுகள்

12418 – தமிழ் ஆரம் 2016.

சுகிர்தா சிவசுப்பிரமணியம், டிலக்ஷிகா அரவிந்தன் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ். இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பதிப்பகம், 681, காங்கேசன்துறை வீதி). xvii, 90 பக்கம், அட்டவணைகள்,

14549 சமாதானம்: தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்கான இலக்கியப் போட்டி எழுத்தாக்கங்கள் 2002.

தொகுப்புக் குழு, சிபில் வெத்தசிங்க (சித்திரங்கள்). கொழும்பு: ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பகம், 1வது பதிப்பு, 2002. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன). (9), 10-96 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,