16618 அவள் ஒரு பூங்கொத்து.

தேவகி கருணாகரன். சென்னை 600014: சிந்தன் புக்ஸ், 327/1, திவான் சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

145 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-81-95383-02-3.

இந்நூலில் தேவகி கருணாகரனின் 15 சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மன்னிப்பு, அவள் ஒரு பூங்கொத்து, மனிதம், காலத்தால் கரையாத நினைவுகள், தெளிவு, திண்டாடும் பண்பாடு, ஒரு மேகலாவின் கதை, இருதலைக் கொள்ளி எறும்பு, நாடோடிகள், அவளா இவள்?, இப்படி ஓர் எதிரொலியா?, சிந்தாமணியின் நினைவுகள், என்றும் என்னவள், வானமே எல்லை, அவன் ஒரு பலியாடு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட தேவகி (தேவகி துரைசிங்கம்) தன் பதின்ம வயதில் இலங்கை வானொலியில் ”இசையும் கதையும்” நிகழ்ச்சிகளின் வாயிலாக எழுதத் தொடங்கியவர். தனது பேரப்பிள்ளைகளை உச்சி மோர்ந்து களித்தபின் 2003இல் மீண்டும் அவுஸ்திரேலியாவில் இருந்து தேவகி கருணாகரனாக வேகத்துடன் எழுதத் தொடங்கியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி “அன்பின் ஆழம்” சிட்னியில் அமரர் எஸ்.பொ. அவர்களால் 2014இல்  வெளியிடப்பட்டது. கடந்த ஏழு வருடங்களில் அவர் எழுதிய கதைகளைத் தொகுத்து வெளிவரும் அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். இலங்கை, நைஜீரியா, அவுஸ்திரேலியா ஆகிய களங்களும், அங்கு வாழும் மனிதர்களின் உணர்வுகளும் இதில் பேசுபொருளாகியிருக்கின்றன.

ஏனைய பதிவுகள்