16631 எங்கட கதைகள் : சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதைகளின் தொகுப்பு.

பாலு மகேந்திரா நூலகம். கிளிநொச்சி: பாலு மகேந்திரா நூலகம், முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 233 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-97823-4-1.

கிளிநொச்சியில் 2020இல் உருவாக்கப்பட்ட பாலுமகேந்திரா நூலகம், 2021இல் கொரோனா பெருந்தொற்று உச்சம் பெற்றிருந்த நேரம் ஈழத்தில் புதிய எழுத்தாளர்களை தோற்றுவிக்கும் நோக்கிலும், எழுத்தாளர்களும் எழுத்தில் ஆர்வமுள்ளவர்களும், கொரொனா பெருந்தொற்று காலத்தை எழுத்தினூடு கடக்கவும் சிறுகதை பொட்டி ஒன்றை நடத்தியிருந்தார்கள். இப்போட்டிக்கு தாயகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 195 கதைகளிலிருந்து தேர்ந்த 13 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் சுடு மணலில் சிலை விதைகள் (முதலாம் இடம், ஓ.கே.குணநாதன்), மிதிபடும் காவோலைகள் (இரண்டாம் இடம், நீ.நிலவிந்தன்), 21 வருடங்கள் (மூன்றாம் இடம், சுப்பிரமணியம் மஹின்) ஆகிய முதல் மூன்று பரிசுக்குரிய கதைகளுடன், ஒப்புதல்கள் (மேரின் றேச்சல்), ஒரு மிதிவண்டியின் கதை (தங்கராசா இராஜராஜேஸ்வரி), கன்றுக்குட்டி (கொ.சகாயராசா), சாறம் (இரத்தினம் பிரதீபன்), சிரட்டை (சுரேந்திரன் தர்சித் ராகுல்), நீ நடந்த பாதையிலே (ரேணுகா செயரூபன்), மீளுயிர்ப்பு (நடராசா இராமநாதன்), முன்பாதை (விமலாதேவி பரமநாதன்), யாதுமாகி (கீதாஞ்சலி சிங்கராசா), வெண்ணிலா (சர்மிளா விநோதினி) ஆகிய ஆறுதல் பரிசு பெற்ற 10 கதைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

ScratchMania 7 Eur welkomstbonus

Inhoud Alhier eenmaal waarderen diegene webste – Koningsgezin Casino Scratchmania Review 2022 Verzekeringspremie and Promoties – scientific games pokermachinespellen Welkomstbonus vanuit ScratchMania Verzekeringspremie Ohne Einzahlung