16639 ஒன்றே வேறே.

ஸ்ரீரஞ்சனி. மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி). 

156 பக்கம், விலை: ரூபா 850., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5849-30-7.

இத்தொகுப்பில் சேணமற்ற அவசரம், நிழல் ஒன்று, புதர் மண்டியிருந்த மணவீடு, பேசப்படாத மௌனம், சங்கர், இனி, ஒன்றே வேறே, காலநதி, முகிலிருட்டில், யாருளர் என்றில்லை, ஒரு நாள், பயம் தொலைத்த பயணம், நிழலில் நிஜம் தேடி, இவளும் அவளும், மனிதமென்பது, பனையோலை இடுக்கில் ஆகிய 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மகுடம் பதிப்பகத்தினரின் 64ஆவது வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீரஞ்சனி கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார். அங்கு ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிவருகின்றார்.

ஏனைய பதிவுகள்

12263 – நீதிமுரசு 2009.

இதழாசிரியர் குழு. கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). xx, 241 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,