16644 கரும்பனையும் கஸ்தானியனும்: சிறுகதைகளின் தொகுப்பு.

த.சாள்ஸ் குணநாயகம். நெதர்லாந்து: த.சாள்ஸ் குணநாயகம், van wasse anear Straat 19A, 3971 VL Driebergen, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xiv, 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-4100-80-0.

தாயக வாழ்விலும், புலம்பெயர் வாழ்விலும் தன்னால் மறக்கமுடியாத நினைவுகளையும் அனுபவங்களையும் பன்னிரு கதைகளாக எழுதித் தொகுத்துத் தந்துள்ளார். ஈழத்தில் நெடுந்தீவு, பரந்தன் உள்ளிட்ட கரும்பனைகளின் பிரதேச வாழ்வோடு ஒன்றித்த தன் 29 ஆண்டுக்கால வாழ்வையும், பின்னர் அகதியாகிப் புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாடான நெதர்வாந்தில் பயன்தரும் பெருவிருட்சமாய் பரந்து வளரும் கஸ்தானியன்களின் பிரதேச வாழ்வையும் இணைத்த மிகுதி வாழ்வின் அடையாளமாய் இச்சிறுகதைத் தொகுதி மலர்ந்துள்ளது. இத்தொகுதியில் ஒரு வீதிக்கு வந்த மனிதன், அச்சமே முகங்களாய், இன்று புதிதாய் பிறந்து.., மலர்க் காடுகளும் முள்முடிகளும்,  நிலவு தொலைந்த மணல்வீடு, ஆறாவது ஒழுங்கைக் கடைசி வீடு, அடையாளம், வாடையில் எழுந்த அலை, பாலி ஆற்றங் கரைகளைத் தேடி, வாசல் தேடி யுத்தம், எல்லைகள், உறங்குநிலை உண்மைகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கதைகள் அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

Go Silver Video slot

Articles Davinci Diamonds slot game review: Settings And you can Play for Happy Leprechaun Position Simple tips to Gamble Vintage 3 Reels Ports Mobile Being