16670 சுருட்டு புகைத்துக் கொண்டிருந்தார் தோழர் சேகுவேரா: சிறுகதைகள்.

சக்கரவர்த்தி (இயற்பெயர்: சுதாகர்). யாழ்ப்பாணம்: ஆதிரை வெளியீடு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

222 பக்கம், விலை: இந்திய ரூபா 220.00, அளவு: 20×13 சமீ., ISBN: 978-624-97325-3-7.

போங்கடா டேய், மாயன், குவெர்னிகா, ஒ ஆளைள சோமாலியா, Lime Ridge, சத்திரியம், உரத்துக் கேட்கும் மௌனம், வெப்பச் சூத்திரம், அலக்ஸான்ட்ரியா, Operation Mongoose ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட சக்கரவர்த்தியின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு, தேத்தாதீவிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வதியும் சக்கரவர்த்தியின் இயற்பெயர் சுதாகர். இவருடைய ”என்ட அல்லாஹ்” என்ற சிறுகதை மிகவும் விரிந்த வாசகர் தளத்தைச் சென்றடைந்தது. இவரது “யுத்த சன்யாசம்”  என்ற கவிதை நூலும், “யுத்தத்தின் இரண்டாம் பாகம்” என்ற சிறுகதைத் தொகுப்பும் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் இச்சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

17788 மலருமோ உந்தன் இதயம்.

ரோசி கஜன். சென்னை 61: ஸ்ரீ பதிப்பகம், புதிய எண். 17, பழைய எண் 16, ஸ்டேட் பாங்க் காலனி விரிவு, 2வது பிரதான சாலை, நங்கநல்லூர், 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை