16672 தாலி: சிறுகதைகள்.

யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 100 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-69-2.

இந்நூலில் எண்டாலும் எனக்குப் பயம், தலை இரண்டு, மலைமுகடு சரிக்கப்படுகிறது, தாலி, முறுவலிக்கிறான், வேலி மூலை மூலிகை, காணவில்லை, சரக்க இக்கதவம் திறப்பிம்மினே, இன்றும் இன்னும், மயான காண்டம் ஆகிய பத்து சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 13.11.1948இல் பிறந்தவர். பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியானவர். மக்கள் வங்கியின் முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். 1996இல் இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. தாலி இவரது பதின்மூன்றாவது நூலும் ஆறாவது சிறுகதைத் தொகுப்புமாகும். இந்நூல் 183ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

17468 காற்றுவெளி-இங்கிலாந்து சிறப்பிதழ்.

 சோபா (ஆசிரியர்). லண்டன் நு13 0துஓ: முல்லை அமுதன், 34, Redriffe Road, Plaistow 1வது பதிப்பு, கார்த்திகை 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 94 பக்கம், சித்திரங்கள், விலை: ஸ்டேர்லிங் பவுண் 4.00,