வி.ஜெகநாதன். யாழ்ப்பாணம்: பண்டிதர் சபா ஆநந்தர் நினைவுக்குழு, 1வது பதிப்பு, மே 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).
40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14.5 சமீ.
பேரறிஞர் பண்டிதர் சபா ஆனந்தர் அவர்களின் நினைவுப் பேருரை ‘மன நிறைவான வாழ்வு’, பண்டிதர் க.சபா.ஆனந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு, அமரர் சபா ஆனந்தரின் அமரத்துவம், செயற்கரிய செய்வர் பெரியார், ஒளிவளர் விளக்காய் விளக்கிய கல்விமான், இணுவில் சபா.ஆனந்தர், உலகுவப்ப வாழ்ந்தாய் வாழி, இணுவையம்பதி, மும்மொழி வல்ல முன்னாள் கல்லூரி அதிபர், சபா ஆனந்தர், ஆனந்தன் பிரிவு, நினைந்தவலமுறும் நெஞ்சம், மாபெரும் அறிஞர், சிவப்பேறு பெற்ற செம்மல், யு ழேடிடந ளுழரட, அறிவிலுயர்ந்த எங்கள் பாட்டா, எமது பாட்டாவின் நகைச்சுவை, புண்ணியவான் ஆகிய தலையங்கப் பதிவுகளினூ டாக இந்நூலில் பேரறிஞர் பண்டிதர் சபா ஆனந்தர் அவர்களின் வாழ்வும் பணிகளும் விதந்து போற்றப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36477. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004108).