12955 – வாழ்வோரை வாழ்த்துவோம் 1994: முஸ்லிம் கலாசார விருது விழா 1994.

கலைவாதி கலீல், F.M.பைரூஸ், S.I.நாகூர்கனி (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 2: முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, 34, மலே வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1994. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

230 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 18.5 சமீ.

முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக அல்ஹாஜ் A.H.M.அஸ்வர் பணியாற்றிய வேளையில் 1991இல் அறிமுகப்படுத்திய நிகழ்வு இது. நான்காவது ஆண்டாக பொற்கிழியும், பத்திரமும், விருதும் ஒருங்கே வழங்கி கௌரவிக்கப்படும் இந்நிகழ்வில் இஸ்லாமியர்களான பாவலர்கள், நாவலர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், வானொலிப் பாடகர்கள், மேடைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், நிழற்படப்பிடிப்பாளர்கள், ஓவியமணிகள் என நாற்பது பிரமுகர்கள் தெரிவுசெய்யப்பட்டு 11.2.1994அன்று கௌரவிக்கப்பட்டார்கள். அவ்வகையில் நடந்தேறிய நான்காவது முஸ்லிம் கலாசார விருதுவிழாவில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். இம்மலரில் விசேஷ அம்சமாக உள்ள கட்டுரைப் பகுதியில் வட புலத்து முஸ்லிம்களின் கலை இலக்கியப் பணிகள் (கலைவாதி கலீல்), ஊவா மாகாண முஸ்லிம்களின் கலை இலக்கியப் பங்களிப்புகள் (சாரணா கையூம்), இலங்கை முஸ்லிம்களின் நூல் வெளியீட்டு முயற்சிகள் 1900-1924 (S.H.M.ஜெமீல்), மத்திய மாகாண முஸ்லிம்களின் கலை கலாசாரப் பணிகள் (எம்.சி.எம்.சுபைர்), இலங்கையில் மேமன் இனம் (மேமன் கவி), சப்ரகமுவ மாகாண முஸ்லீம்களின் கலை கலாசாரப் பங்களிப்புகள்(எம்.வை.எம்.மீஆது), பாராளுமன்ற கலரியில் கால் நூற்றாண்டு (M.P.M.அஸ்ஹர்) ஆகிய கட்டுரைகள் இ;டம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14126).

ஏனைய பதிவுகள்

12177 – முருகன் பாடல்: பதினொன்றாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

12683 – மகாஸ்தபதி கோவிந்தராஜுவின் தேர்த்திறன் .

வேலுப்பிள்ளை அம்பிகைபாகன். இந்தியா: தென்னாசிய சமூக விஞ்ஞான நிதியம், குமேயோன் ஹில்ஸ், அல்மோறா, இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: காங்கேயன் கலைக்கோட்டம், ராஜசில்பி விலாட சங்கிலியின் மரபுவழி நிறுவகம், கலாபவனம், விஸ்வகர்ம வட்டம், தேவாலய வீதி,