16681 நன்றி சொல்லும் நேரம்.

திக்குவல்லை கமால். பண்டாரகமை: ஃபரீதா பிரசுரம், 104, அத்துலகம, 1வது பதிப்பு, 2020. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ், 30/7, ஐந்தாவது ஒழுங்கை, அம்பகஹபுர).

x, 11-114 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-7301-01-3.

தென்னிலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் வாழ்வை, பண்பாட்டுக் கோலங்களுடன் பிரதிபலிப்பது  திக்கவல்லை கமாலின் கதைகளின் சிறப்பம்சமாகும். அவரது இடைவிடாத முயற்சியின் காரணமாக, இலங்கைத் தமிழ் சிறுகதைப் பரப்பில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துள்ளார். இந்நூலின் கதைக் கருக்கள் சமூக-கலாச்சாரப் பின்புலத்தில் தோற்றம் பெற்றாலும், அவை வெளிப்படுத்தும் செய்தி முழு மனித குலத்திற்குமானதாக அமைய வேண்டுமென்பதில் மிகக் கவனமாக இருந்து வருபவர். அதனை “நன்றி சொல்லும் நேரம்” என்ற தனது பத்தாவது சிறுகதை நூல் மூலம் மேலும் ஒரு தடவை உறுதிசெய்துள்ளார். இத் தொகுதியில் கமால் எழுதிய  மூக்குக் கண்ணாடி, பேய்கள், வீரத்தாய், நன்றி சொல்லும் நேரம், ஊற்றுக் கண்கள், இறுதி மரியாதை, அத்தர் வாசம், உழைப்பு, வாழை மரங்கள், தகுதிகாண் காலம், தொடரும் சுவடுகள், பொது மனிதன், ஸாலிஹான புள்ள, இரண்டு வரம், பெரியவர்கள் ஆகிய 15 கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Norsk Casino

Content Spilleautomater Autonom Påslåt Online Casino Norge Gratisspinn Hvordan Sette Inn Eiendom For Spillerkontoen Nye Casinoer Uten Omsetningskrav Hvordan Påvirker Nettcasinoets Bevegelse Spillopplevelsen? Ved å

N1 Gambling establishment

Blogs The best 100 percent free Spins Should i Check in Multiple Membership To get No-deposit Added bonus? Recommendation Free Revolves Contrast The newest Free