16694 புலர் காலையின் வலி.

இயல்வாணன் (இயற்பெயர்: சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன்). யாழ்ப்பாணம்: தாயதி வெளியீடு, சமூக செயலூக்கத்துக்கான முன்னோடி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

112 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-624-98471-6-3.

இந்நூலில் உள்ள இயல்வாணனின் 13 சிறுகதைகள் புலர்காலையின் வலி, இன்னும் அதே, பயிரில் புழு, பந்தயக் குதிரை, தாகம், சரிவு, முடவன் நடை, வெளிக்கும், புகை, முடிந்த ஒரு இரவும் முடியாத ஒரு பகலும், தவிப்பு, தாயினும் நல்ல, கோலம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. இயல்வாணன் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். பாடசாலை ஆசிரியராக,அ திபராகக் கடமையாற்றி, தற்போது இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக கடமை புரிகிறார். 20 வருடங்களுக்கும் மேலாகப் பத்திரிகையாளனாகவும் செயற்பட்டு வருகின்றார். இவரது ”புலர்காலையின் வலி“ சிறுகதை ”பூபாளராகங்கள்”; உலகளாவிய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. இயல்வாணன் படைப்புகள்: ஓர் ஆய்வு என்ற தலைப்பில் செல்வராசா ஜோன்சன் என்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தனது தமிழ் சிறப்பு கலைமாணி பட்டத்துக்காக ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார். ஸ்ரீகுமரனின் சிறுவர் இலக்கிய முயற்சிகள் என்ற தலைப்பில் குகதாசசர்மா சிவகுமார், யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் முதுமாணி பட்டத்துக்காக ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Play Blackjack

Content Last Played Split Popular Casino Bonuses Can I Play Blackjack Online For Free? That said, it is not a very easy game, and the