16695 பேனாமுனையின் நேசம்: சிறுகதைத் தொகுப்பு.

எஸ்.எப். ரினோஸா முக்தார். குருநாகலை: எஸ்.எப். ரினோஸா முக்தார், ஆரிஹாமம், அஹதியா நகர், தும்மளசூரிய, 2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-42879-0-7.

குருநாகலை மாவட்டத்தில் முகிழ்ந்துள்ள இளம் படைப்பாளி ரினோஸா முக்தார் எழுதிய இச்சிறுகதைத் தொகுப்பில் ஏழைத்தாயின் ஏக்கம், இறைவன் கொடுத்த பரிசு, கல்லக்குள் ஈரம் கசிகிறது, வாழ்க்கை வாழ்வதற்கே, திருப்தி கண்ட உள்ளம், கடமைகள் புறக்கணிக்கப்படும் போது, வேண்டாத உறவுகள், மின்னுவதெல்லாம் பொன்னல்ல, இப்படியும் ஒரு நாள், அனுபவம் பேசுகிறது, ஏனிந்த மாற்றங்கள், புண்ணாகிப் போன சில இதயங்கள், புரட்டப்படாத பக்கங்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 13 கதைகள் இடம்பெற்றுள்ளன. தான் வாழும் சுற்றாடலின் இயற்கை வளங்களையும், வாழ்க்கைப் பண்புகளையும் இணைத்து மண்வாசனை வீசும் இலக்கியச் சுவையுடன் இச்சிறுகதைகள் படைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14692 சமாதானத்தின் கதை.

ஜேகே (இயற்பெயர்: ஜெயக்குமரன் சந்திரசேகரம்). சுவிட்சர்லாந்து: ஆதிரை வெளியீடு, Neugasse 60, 8005 Zurich, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை). 214 பக்கம், விலை: இந்திய ரூபா 170.00,