16696 பொய்யெல்லாம் மெய்யென்று.

மதுபாரதி (இயற்பெயர்: திருமதி ப.இளங்கோ). திருக்கோணமலை: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (திருக்கோணமலை: ஏ.ஆர்.டிரேடர்ஸ், 82, திருஞானசம்பந்தர் வீதி).

135 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-6135-16-4.

கிழக்கிலங்கையின் ஏறாவூரைச் சேர்ந்த மதுபாரதியின் சிறுகதைத் தொகுப்பாக மலர்ந்துள்ள இந்நூலில் வரமா சாபமா?, களவும் கற்று மற, போதிமர தரிசனங்கள், வானதி எனும் நான், கறுப்பு வெள்ளை கனவு, வம்மிப் பூக்கள், ராணிகள், பொய்யெல்லாம் மெய்யென்று, காலம் கற்றுத்தந்த பாடம், இதுவும் கடந்து போகும், மகளிர் மட்டும், ஆடிய பாதங்கள், கனவும் மெய்ப்படும் ஆகிய தலைப்புகளில் எழுதிய 13 கதைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியரின் நூலுருப்பெறும் நான்காவது படைப்பு இதுவாகும்.

ஏனைய பதிவுகள்