12959 – ஸ்ரீமான் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் சரித்திரம்.

வு.யு.ராஜரத்தினம். சென்னை: வு.யு.ராஜரத்தினம், 1வது பதிப்பு, மே 1934. (அச்சக விபரம் தரப்படவில்லை),

viii, 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17 x 12 சமீ.

சி. வை. தாமோதரம்பிள்ளை (சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை C.W. Thamotharampillai, 12.09.1832-01.01.1901) பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டுப் பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த தமிழறிஞர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்கவேண்டும் எனவும் தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் எனவும் விரும்பித் தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடியான இவர் பற்றிய வாழ்க்கை வரலாற்றை இந்நூல் பதிவுசெய்கின்றது. ஈழச்சிறப்பு-ஆரம்ப உரை, பிள்ளை அவர்களின் ஜனனம், இல்வாழ்க்கைச் சிறப்பு, பிள்ளையவர்கள் ஏற்ற கடமை, தொல்காப்பியம், வீரசோழியமும் தணிகைப் புராணமும், தொல்காப்பியம் பொருளதிகாரம், கலித்தொகை, பிள்ளையவர்கள் நீதியதிபரானது, இலக்கண விளக்கம், சூளாமணி, தொல்காப்பியம் எழுத்ததிகாரம், குடும்ப விஷ யங்கள், அரசினர் மதிப்பு, அகநானூறு, வசன சூளாமணி, பிள்ளையவர்களின் பிற்காலமும் மரணமும், முடிப்புரை ஆகிய 18 இயல்களில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. மேலும், பக்கம் 96 முதல் 112 வரை சி.வை.தா அவர்கள் இறந்தபோது பல்வேறு வித்துவான்களும் இயற்றிப்பாடிய சரமகவிகள் தொகுக்கப்பெற்றுள்ளன. அவ்வகையில் கும்பகோணம் இராஜாங்க கலாசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதரும் பிள்ளையவர்களின் நண்பருமான உ.வே.சாமிநாத ஐயரவர்கள், வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி, அ.குமாரசுவாமிப் புலவர், நா.கதிரவேற்பிள்ளை, சி.வை.சின்னப்பாபிள்ளை (சி.வை.தா. வின் சகோதரரும் அவரது மாணாக்கரும்), சி.தா.அழகசுந்தரம் ஆகியோரின் சரமகவிகள் இந்நூலின் பின்னிணைப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 14119. நூலின் முற்பகுதி எஸ்.காராளசிங்கம் அவர்களினால் மார்ச் 1993இல் எழுதி வெளியிடப்பட்ட Life of Rau Bahadur C.W.Thamotharampillai என்ற நூலும் இடம்பெற்றுள்ளது). மேலும் பார்க்க: 12011.

ஏனைய பதிவுகள்

Leovegas Arvostelu Sekä Kasinobonus

Leovegas Arvostelu Sekä Kasinobonus Leovegas Casino Arvostelu 2023 Nappaa Leovegas Bonus Ja Voita Content Slotit Ja Live Casino Suunnittelu Ja Navigointi Leovegas Casinolla 📞 Leo

12784 – சாபமும் சக்கரவர்த்தியும்: நாடகங்கள்.

பாகீரதி கணேசதுரை (புனைபெயர்: மாவை பாரதி). சென்னை 600 094: பூவரசி வெளியீடு, 20/2இ சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, மே 2016. (சென்னை 600 094: பூவரசி வெளியீடு,